எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும், அவர்களின் அர்த்தமற்ற பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க் குழுவில் இருந்துதான் அதிக பிரச்சனை வருகிறது. எம்.பி.க்களுக்கு பேசும் உரிமையும் திறமையும் உள்ளது.
ஆனால் அவர்கள் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நேரம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்ட போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.