சிற்றுண்டிகளின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (டிசம்பர் 18) நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து தின்பண்டங்களின் விலையும் ரூ. 10 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், சந்தையில் கோதுமை மாவின் விலையும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.