இலங்கைக்கு நிதி மற்றும் கடன் வழங்குவதில் இந்தியா தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயற்படும் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொதுக் கடனின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இணங்க நிதி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதில் இந்தியாவின் தலையீடு குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் இருந்து போதிய உத்தரவாதங்கள் பெறப்பட்டவுடன், இலங்கைக்கான நிதியுதவி திட்டமொன்றை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.