பாராளுமன்றம் ‘முழு நீள முதியோர் இல்லம்…’ :புத்தளம் மரிக்காரின் கவிதை தொகுப்பு!

Date:

புத்தளம் மரிக்கார் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் இளமைக்காலம் முதல் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கவிதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமானவர்.

அந்தவகையில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் சமூக பிரச்சினைகளையும் கவிதைகளின் ஊடாக உணர்வு பூர்வமாக எழுதும் அவருடைய பாணி அலாதியானது.

எனவே அவருடைய கவிதைகளில் காணப்படுகின்ற கருத்துக்கள் வாசகர்களை கூடுதலாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அவருடைய கவிதைகளை தொடர்ச்சியாக வழங்கவிருக்கின்றோம்.

பாராளுமன்றம்..!

                                                    மூடர் கூடம்…

முழு நீள
முதியோர் இல்லம்…

வாய்களால் வாழ்வோரின்…
வாசஸ்தலம்…

தாவி விளையாடும்…
தவளைகளின் தடாகம்…

வரிசையில் நிற்காதோர்…
வந்துபோகும் இடம்…

களவும், பொய்யும்…
கொலையும் கற்குமிடம்….

மீசை வைத்த மிருகங்கள் கத்தும்…
Nursary வளாகம்…

நாக்குகளின்
நரகம்…!

ஒட்டுமொத்த கள்வர்கள்..
ஒளிந்திருக்கும் இடம்…

தேசத்தை தின்னும்…
பேய்களின் உணவு மண்டபம்…

ரகசியமாய் ரத்தம் உறிஞ்சும்…
அட்டைகளின் கொட்டில்…..

விலையுயர்ந்த கதிரையில் வீற்றிருக்கும்…
விஷ ஜந்துகளின் மாடம்…

கஞ்சா பயிரிடும்…
நடிகையின் வயல்….

நாட்டையே விற்கும்…
முகவர் நிலையம்…

வாக்குறுதிகள் தூக்கில் தொங்கும்…
வரலாற்று museum…

மக்கள் பிரதிநிதிகள்…
மக்களுக்கெதிராக வாக்களிக்கும்…
தேர்தல் நிலையம்…!

நமக்கு நாமே…

தேர்தல் மேடையில் தெரிவுசெய்த…
ஆப்புகளின் அரங்கம்…!!

###

225…

முகத்தை தவிர…
முழுவதும் ஒன்றுதான்…

தெரிவில் விழிப்போம்…!

அடுத்த Election இலேனும்…
அறிவைப் பிரயோகிப்போம்…!!


புத்தளம் மரிக்கார்
 

Popular

More like this
Related

சாதாரண தர மாணவர்களின் விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்!

சாதாரண தரப் பரீட்சை 2023(2024)க்கான விடைத்தாள் பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும்...

முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி  வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக...

இந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்!

இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு...

மது பாவனையை கட்டுப்படுத்தியதால் மோதல்கள் குறைந்தன: ஆய்வில் தகவல்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் போது மது அருந்துவதைக் கட்டுப்படுத்தியதன்...