வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு பிணை!

Date:

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று(27) கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை, திறக்குமாறு வலியுறுத்தி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு கல்வி அமைச்சுக்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 62 பேரும் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் இந்தநிலையில், இன்றைய தினம் குறித்த நபர்களை கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...