உள்ளுராட்சி தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி மற்றும் நிஹால் ஜயசிங்க ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந் நிலையில், திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பலரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளனர்.