ரமழான் காலத்தில் வறுமையில் இருக்கும் குடும்பத்திற்கு உதவிடுங்கள்!

Date:

பொத்துவில் பகுதியில் வசிக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பமொன்று வாழ்வாதார பிரச்சினைகளால் வீடின்றியும் உணவுப் பொருட்களின்றியும் மிகுந்த வறுமை நிலைமையில் ஆதரவற்று காணப்படுகின்றது.

55 வயது மதிக்க ஒரு தாய் மற்றும் 63 வயதுடைய கணவன் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட அவர்களின் மகள் மற்றும் அந்த மகளின் இரு குழந்தைகள் என்று எல்லோரும் மிகுந்த வறுமையில் உள்ளனர்.

நான்கு பக்கமும் தகரத்தினால் மேயப்பட்டு மேலே கிடுகினால் மேயப்பட்டு 9 வருட காலங்களாக இந்த இடத்தில் வசித்து வருகின்றார்கள் யாரும் எந்த உதவியும் செய்து தரவில்லை என்று கண்ணீருடன் அந்த தாய் கதறி அழுகின்றார்.

உண்மையில் சமையலறையில் அங்கு எந்த விதமான பொருட்களும் இருக்கவில்லை இன்று வெறும் கிழங்கு சாதத்தை சமைத்து அவர்கள் இப்தார் செய்திருக்கின்றார்கள்.

இந்த குடும்பத்திற்கு ஒரு அறை வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கு வசதி படைத்தவர்கள் இவர்களுக்கு உதவிகளை செய்யுங்கள்.

அல்லது நேரடியாக நீங்கள் சென்று பார்வையிட்டு அந்த வேலைகளை செய்து கொடுங்கள் அதேபோன்று இந்த ரமழான் மாதத்தில் அவர்களுடைய, நோன்பை சரிவர முடிப்பதற்கு உணவிற்கும் உதவிடுங்கள்.

இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புவோர்: Mansoor Adam – 0773280067 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...