தற்போதைய ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது:கொழும்பு பேராயர்

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ நீதியை எதிர்பார்க்க முடியாது என கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் பலமுறை அளிக்கப்பட்டாலும், அது ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, தெஹிவளையில் தன்னைத் தானே வெடிக்கச் செய்த தற்கொலைக் குண்டுதாரி ஏன் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பதைத் தீர்மானிக்க புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை தேவை.

இந்தோனேசியாவில் ISIS ஐ அழைத்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பேற்குமாறு கோரிய ‘ஜோனிக் ஜோனிக்’ யார் என்பதைத் தீர்மானிக்க, அவர் ஏன் கைது செய்யப்படவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய எங்களுக்கு ஒரு புதிய விசாரணை தேவை, “என்றார்.

“தற்போதைய ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது என தோன்றுகிறது,”

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை மேற்கோள்காட்டி, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸின் பூரண ஆசீர்வாதம் இருப்பதாக அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன் உதய்க்வே தெரிவித்தார். .

கத்தோலிக்க திருச்சபை பௌத்த துறவிகள் மற்றும் பிற மதகுருமார்களை அவமதிப்பதில் நம்பிக்கை இல்லை என்றும், அவர்களை அவமதிக்கும் நபர்களுடன் பழகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதகுருமார்களை, குறிப்பாக பௌத்த பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் பிக்குகளை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்துவதற்கு கத்தோலிக்கர்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் இதுபோன்ற பிரசாரங்களுக்கு தேவாலயம் பின்னால் இல்லை என நான் கூற விரும்புகிறேன், ”என்றார்.

“பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்கமாட்டோம், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுடன் பழகமாட்டோம். இலங்கையின் கலாசாரம் பௌத்தத்துடன் தொடர்புடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...