கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நுழைந்த நபரால் பரபரப்பு!

Date:

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் பிரவேசிக்க வந்த போது பிரதான வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...