மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது: அரசாங்கம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ள சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

தனிப்பட்ட ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.பி.திஸாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே ஆகிய சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தின் உயர் மட்ட அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் இதனை அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...