தொலைத்தொடர்புத் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் கலைக்கப்பட்டுள்ளது.
மேலும்,கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு 1990 பெப்ரவாி ஆறாம் திகதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறை திணைக்களமும் கலைக்கப்பட்டுள்ளது.