தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக ஐக்கிய இளைஞர் சக்தி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
வீரவன்ச எழுதி வெளியிட்டுள்ள ‘நவய செங்கவுனு கதாவ’ என்ற நூல் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போது இராணுவத்தின் நிலைப்பாடு சம்பந்தமாக வீரவன்ச, பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் இராணுவம் ஜனாதிபதி உத்தரவுகளை ஏற்கவில்லை எனவும் அமெரிக்க தூதுவரின் தாளத்திற்கு ஏற்றபடி ஆடியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் ஐக்கிய இளைஞர் சக்தி குறிப்பிட்டுள்ளது.
சில இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே விமல் வீரவன்சவின் நூலுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.