‘துண்டிக்கப்பட்ட கைகால்களுடன் உடல்களை கண்டேன்’: ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவர் பரபரப்பு பேட்டி!

Date:

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்த போது பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா நோக்கி சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது.

அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வர, தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, மேலும் கோர விபத்தை ஏற்படுத்தியது. இதன் சத்தம் கேட்டதும் அருகில் உள்ள மக்கள் ரயிலில்   தொடங்கினர்.

பின்னர் மீட்புப்படையினரும்  விரைந்து வந்து மீட்பு பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்து உயிருடன் தப்பிய பயணி ஒருவர் சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

தூங்கிக் கொண்டிருந்த நபர் ரயில் புரண்டு விபத்துக்கு உள்ளாவதை அறிவதற்குள் எல்லாமே முடிந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “நான் ரிசர்வேஷன் செய்து பயணித்துக் கொண்டு இருந்தேன். நேற்று இரவு கண் அயர்ந்து  நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தேன். ரயில்கள் மோதி பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் கண்விழித்து பார்க்கும் போது நாங்கள் இருந்த பெட்டி தடம் புரண்டு கொண்டு இருந்தது.

சூழலை உணரும் முன்னர் என் மீது 10-15 பேர் விழுந்துவிட்டனர். என் கைகள், கழுத்து மற்றும் தோள்களில் நிறைய வலி ஏற்பட்டது.

மீட்டுப்பணி தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிலையில் பலி மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் இந்த வழித்தடத்தில் செல்லும்  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில ரயில்கள் வழி மாற்றப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...