5450 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தகுதியான ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் பட்டதாரிகள் கல்வியாளர்களாக பணியாற்றுவதற்கு திறன்களுடன் கூடிய பயிற்சி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.