ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகரினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி, அஜித் மன்னப்பெரும இன்று முதல் நான்கு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வாய்மூல கேள்வி பதிலுக்காக நேரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்பட்ட அமைதி இன்மையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும செங்கோலை தொட்டமையினால் அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.