இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார சபை பாரிய நட்டத்தில் இயங்குவதாக கடந்தகாலத்தில் பல தரப்பால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அதனை மறுசீரமைப்பதற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
மின்சார சபையை எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை குறைக்கவும் மின்சார சபையின் இலாபத்தை அதிகரிக்கவும் மின் கட்டணம் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டன.
இவ்வாறான பின்புலத்திலேயே மின்சார சபையை மறுசீரமைப்புக்கும் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அடுத்தவாரம் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.