வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுப்பாட்டுகள் நீக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று(09) முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
இது தொடர்பிலான வர்த்தமானி நேற்று(09) வௌியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.