தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பில் புத்தளத்தில் மார்ச் 12 இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்வு!

Date:

புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் 35 உறுப்பினர்களுக்கான தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி திட்டம் கடந்த 2023.12.23 ஆம் திகதி புத்தளம் ரம்யா லங்கா அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமய வழிபாடுகளுக்கு பின்னர் இடம்பெற்ற இந்நிகழ்வில் மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்டக் குழுவின் உப தலைவர் திருமதி முஸ்னியா அவர்களினால் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றியும் அறிமுக உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி ஜகத் லியன ஆராய்ச்சி (இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர்) அவர்களினால் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களைத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாக தடுக்கும் மற்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்தும் பொறிமுறை பற்றிய கலந்துரையாடலை நடத்தினார்.
தனியொரு கிராம உத்தியோகத்தர் பெரும் சனத்தொகைக்கு (2500 – 3000 குடும்பங்கள்) சேவைகளை வழங்கும்போது ஏற்படும் நிர்வாக மற்றும் வளப் பகிர்வு பிரச்சினைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய அணுகுமுறைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
அதன் பின்னர் பார்வையாளர்களுக்கு கேள்விகள் கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்டக் குழுவின் செயலாளர் திருமதி எச்.என்.எஸ்.மல்காந்தி அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் மொத்தம் 35 பேர் வரை கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...