ஜப்பானில் 379 பேருடன் சென்ற விமானம் திடீரென தீப்பற்றியது: மீட்பு பணிகள் தீவிரம்!

Date:

ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் தீப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, தீ விமானம் முழுவதும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பயணிகள் விமானத்திலிருந்த 379 பேரும் பத்திரைமாக விமானத்திலிருந்து மீட்கப்பட்டிருந்திருக்கின்றன.

ஆனால், கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்திலிருந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

ஜப்பான் கடலோர காவல்படை, அதன் விமானம் ஒன்று பயணிகள் விமானம் மீது மோதியதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடலோர காவல்படை விமானத்தின் ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் கணக்கில் வரவில்லை எனவும் ஒருவர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹனேடா விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...