ஹிஜ்ரி 1445 “ரமழான்” மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு: எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை!

Date:

ஹிஜ்ரி 1445 ரமழான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 ஷஃபான் 29ஆம் நாளாகிய 2024 மார்ச் 11 திங்கட்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

இம்மாநாடு இன்ஷா அல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுத் தலைவர் அல் கலீபத் அல் ஷாதுலீ மௌலவி எம்.பி.எம். ஹிஷாம் (அல் பத்தாஹி) அவர்களின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறை குழு மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சகல தரப்பினரதும் இறுதித் தீர்மானம் இன்ஷா அல்லாஹ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக உடனடியாக உத்தியோகபூர்வமாக மாநாட்டு தலைவரினால் அறிவிக்கப்படும்.

தலைபிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்கள் தயவுடன் வேண்டப்படுகின்றனர்.

பிறை சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு 011 2432110, 011 2451245, 0777 353 789 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்புகொள்ளலாம்.

 

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...