அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்ய பிடியாணை

Date:

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கற்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினரை எதிரியாக குறிப்பிட்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வெளிநாடொன்றிலிருந்து கொண்டுவந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க  விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட  அலி சப்ரி ரஹீம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...