இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் புகையிரத நிலைய அதிபர் சங்கம்

Date:

 பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு செல்லும் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள், திருகோணமலை மற்றும் அங்கிருந்து மட்டக்களப்பில் இருந்து ரம்புக்கனைக்கு செல்லும் இரவு அஞ்சல் புகையிரதம் உட்பட பல ரயில்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட 14 பிரச்சினைகளை முன்வைத்து நிலைய அதிபர் சங்கம் இன்று பிற்பகல் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தன.

மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயக்கப்படவிருந்த அனைத்து புகையிரதங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொழில்சார் நடவடிக்கையின் காரணமாக, இயங்குவதற்கு தயாராக இருந்த அஞ்சல் புகையிரதங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிடுகிறது.

இதற்கிடையில் நாளை (10) இயக்க திட்டமிடப்பட்டுள்ள பல அலுவலக புகையிரதங்களை இயக்குவதற்கு தேவையான அதிகாரிகளை பணியமர்த்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாளை (10) புகையிரத சீசன் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் சீசன் பயணச்சீட்டை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை போக்குவரத்து அமைச்சு வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...