நாடு முழுவதும் 10 இலட்சம் மர நடுகை: மாணவிக்கு “Brilliant Child Award” விருது!

Date:

பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹாவின் செயற்பாடுகளை கௌரவித்து அம்மாணவிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் நடாத்திய நிகழ்வில் அம்மாணவிக்கு “Brilliant Child Award” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது.

சம்மாந்துறை அல் -அர்சத் ம.வித் தரம் 7 ல் கல்வி கற்று வரும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா தனது 10 வயதிலிருந்து மாவட்டமட்ட, தேசிய மட்ட, சர்வதேச மட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளினையும், கௌரவ பட்டங்களையும் பெற்றுக் கொண்ட சிறுமியாவார்.

 

10 இலட்சம் நபர்களினை இலக்காய் கொண்டு “சுற்றுச் சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி” என்ற சாதனையாளர் விருதுக்காக பரித்துரை செய்யப்பட்டுள்ளார்.

நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம், மற்றும் பிரதி அதிபர் இ.றினோசா, உதவி அதிபர்களான எம்.ஆர்.எம் முஸாதிக், எம்.எச்.ஐ.இஸ்னத், யு.எல்.ஹிதாயா, எம்.எப்.நஸ்மியா, ஆகியோரின் பங்கேற்புடன் கல்முனை பிர்லியன் விளையாட்டு கழக தலைவர் எம்.எஸ்.எம்.பழில் மற்றும் கழகத்தின் தவிசாளரும் ஆரம்ப பிரிவு பொறுப்பாசிரியருமான ஏ.சி.நழீம் ஆகியோருடன் சக ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...