புத்தளம் பெரிய பள்ளிவாசலில் அழகிய தொனியில் (கிராத்) குர்ஆனை ஓதும் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்!

Date:

புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருக்கின்ற அல்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுகின்ற நிகழ்ச்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.

இச்சிறப்பான நிகழ்ச்சியில் சர்வதேச ரீதியில் பிரபலமான பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த அல் காரி ஹாபிஸ் கம்ருல் ஆலம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இத்தோடு அல்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுவதற்கு நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் காரிமார்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுடைய அழகிய தொனியிலான கிராத் பாராயணம் முறைகளையும் அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

மிகப்பெரிய ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்விலே புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இயங்கிவந்த மத்ரஸா ரவ்ழதில் ஹாபிழீன் என்ற ஹிப்ழ் மத்ரஸாவை மீள ஆரம்பிக்கும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வு பேஸ்புக்கிலும், யூடியூபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...