2024 ஜனாதிபதி தேர்தல்: விசேட கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இன்று (02) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன், தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி தேர்தல் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் இதில் இணைந்து கொள்ளவுள்ளது.

11 மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கும் இன்று (02) அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நிர்வாக விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நேற்று (01) நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...