புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புக்கள் வகிப்போம் எனவும் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தரவாதம் வாங்கியுள்ளனர்.
அஜித் தோவலினுடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இது வரையான பிரச்சார கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நிறைந்து காணப்பட்டதாகவும் தோவலிடம் கூறிய அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 90 வீதமான முஸ்லிம்கள் சஜித் பிரமேதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.