யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Date:

கொழும்பு  கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த தகவலை பிரதி தொடருந்து பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு ரயில் புறப்பட்டுள்ளதுடன், நாளை 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

வடக்கு ரயில் பாதையில் தினமும் ரயில் பயணிக்கும் என்றும், ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் ரயில் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேர அட்டவணைக்கு அமைய, கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் தொடருந்து பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும். பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் தொடருந்து இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் ரயில்பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் ரயில் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் ரயில் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை ரயில்நிலையத்தை வந்தடையும்.  மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் ரயில் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...