ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Date:

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது.

மும்படையினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், துணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

மேலும்  பல பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மிகுந்த கவனம் செலுத்த உள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

53 ஆவது வருடத்தை பூர்த்தி செய்யும் இஸ்லாமிய கலாபீடம் ஜாமியா நளீமியா!

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கணசமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக...

பலாந்தை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் “பலன்புர முஸ்லிம்கள்” நூல் வெளியீடு செப்டம்பரில்

களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட வரலாற்று  சிறப்புமிக்க பலாந்தை பிரதேச...

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே...

இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்வீர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: அமெரிக்க செனட்டர் ஜாக்கி ரோசன் வலியுறுத்தல்

காசாவில் தினமும் இரவு பல பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படைகள் கொல்ல வேண்டும்...