மருதானை சாஹிரா மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை..!

Date:

இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி அண்மைக்காலமாக பல துறைகளில் பிரகாசித்து வருகிறது.

பல விளையாட்டுத்துறைகளிலும் பரீட்சைகளிலும் இன்னும் பல நிகழ்ச்சிகளிலும் இப்பாடசாலை பல மட்டங்களிலும் சிறப்பான தேர்ச்சிகளை பெற்று வருகின்றது.

அந்தவகையில் இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாக கருதப்படுகின்ற இப்பாடசாலையின் 5ஆம் தர மாணவர்கள் இம்முறையும் மிகச்சிறப்பான முறையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

மொத்தமாக 243 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவர்களில் 228 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

அவர்களில் எழுபது (70) மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு  மேல் மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 100சதவீதமாகும்.

இப்பரீட்சையில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்களுக்கு ‘நியூஸ்நவ்’ குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...