உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்காத மஹிந்த, மைத்திரி, கோட்டா

Date:

இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாக்களிக்க வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அவரது வலது முழங்காலில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கோட்டாபய  ராஜபக்சவும் மைத்ரிபால சிறிசேனவும் வேறு சில தனிப்பட்ட காரணங்களால் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வாக்களித்தனர்.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...