செம்மணி மனித புதைக்குழி விவகாரம்:வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டங்கள்

Date:

யாழ்ப்பாணம் – செம்மணியில் “அணையா தீபம் ”மூன்று நாள் போராட்டம் இன்று ஆரம்பமாகிறது.
அதேநேரம், வலிகாமம் வடக்கில் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் நீதிகோரி சமூக ஆர்வலர்கள் அணையா தீபம் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

”தமிழ் மக்கள் பலரது உடல்களைத்  தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

குறித்த விடயத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி  ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதேநேரம், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இரண்டாயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி அந்த பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, செம்மணி அணையா தீபம் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...