அக்குரணை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தியிடம்: தலைவராக இஸ்திஹார்!

Date:

அக்குரணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் தக்கவைத்துள்ளது.

அதன்படி அக்குரணை பிரதேச சபையின் தலைவராக இஸ்திஹார் இமாதுதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மேலதிக 3 வாக்குகளைப் பெற்று தலைவர் பதவிக்குத் தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார்.

அக்குரணை பிரதேச சபையில் உள்ள 30 உறுப்பினர்களில் ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை,  29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தலைவர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தாரிக் அலி போட்டியிட்டு 13 வாக்குகளை பெற்றார்.

உப தலைவர் பதவிக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

Popular

More like this
Related

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...