தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம்: தடையுத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு

Date:

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (17)  ரத்து செய்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...