நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானம்

Date:

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில பகுதிகளில் 50 மி.மீ. அளவிலான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மொணராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding...

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...