பஸ்களை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிரூபம் இரத்து!

Date:

பஸ்களை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அந்த சுற்றுநிருபம் இரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஸ்களை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பஸ்களில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...