2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
குறித்த காலக் கட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் மட்டும், பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,469.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை.
