நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

Date:

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம் காரணமாக சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாவல வீதியில் நுகேகொடை மேம்பாலம் அருகே உள்ள ஹைலெவல் (High level ) சந்திலிருந்து திரையரங்கு எதிரே உள்ள நாவல சுற்றுவட்ட பாதை வரை வாகனப் போக்குவரத்து பிற்பகல் 2.00 மணி முதல் பேரணி முடியும் வரை தடை செய்யப்படும்.

வாகன சாரதிகள் சிரமத்தைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாற்றுப் பாதைகள்:

  • கொழும்பு மற்றும் கொஹுவலையில் இருந்து நுகேகொடை  வழியாக நாவல அல்லது பிட்ட கோட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள், ஹை லெவல் வீதியில் உள்ள கம்சபா சந்தியில் இடதுபுறம் திரும்பி, கட்டிய சந்தி ஊடாக மிரிஹான மற்றும் நாவல பகுதிகளை அடையலாம்.
  • புறக்கோட்டை மற்றும் நாவல பகுதியில் இருந்து நாவல சுற்றுவட்டம் வழியாக நுகேகொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள் கட்டிய சந்தியில் இருந்து கம்சபா சந்தி வரையோ, அல்லது தெல்கந்தை சந்தியில் இருந்து ஹை லெவல் வீதி வரையோ பயணிக்கலாம்.
  • மஹரகமவில் இருந்து ஹை லெவல் வீதி வழியாக நுகேகொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள், கம்சபா சந்தியில் வலதுபுறம் திரும்பி, கட்டிய சந்தி ஊடாக பயணிக்கலாம்.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...