நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

Date:

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நுவரெலியா, மாத்தளை, பதுளை, பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்தின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

 

நாட்டின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில், மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சைவநெறிக்கூடம் விரைந்த வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான திரு....

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி...

போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘குறைபாட்டுப் புள்ளி’ முறை ஒக்டோபரில் ஆரம்பம்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்தும் ஆறு...

ஆசிய தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்று கம்பஹா சிறுவன் ஃபஹத் நவாஸ் சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக...