பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

Date:

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு இத்தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

வன்முறை ஏதுமின்றி அமைதியாகத் தோ்தலை நடத்தி முடிக்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமாா் 10 இலட்சம் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 2024, ஒகஸ்டில் மாணவா் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை  இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

போராட்டங்களை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்தியதாக அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு இத்தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, முன்னாள் பிரதமா் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களதேஷ் தேசியவாதக் கட்சி (PNP) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

பாராளுமன்றத்தின் 300 இடங்களுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

வேட்பாளரின் மறைவால் ஒரு தொகுதியில் தோ்தல் ரத்தானதையடுத்து, மீதமுள்ள 299 தொகுதிகளில் 50 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 1,755 வேட்பாளா்கள் மற்றும் 273 சுயேச்சைகள் களத்தில் இருந்தனர்.
நாடு முழுவதும் உள்ள 42,659 வாக்களிப்பு நிலையங்களில், 24,000 இடங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக 90 சதவீத வாக்களிப்பு நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
45 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், இந்தத் தோ்தலைக் கண்காணித்திருந்தனர்.

 

வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.

பாராளுமன்றத் தோ்தலுடன், 84 அம்ச ஜனநாயக சீா்திருத்தங்களை உள்ளடக்கிய ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ மீதான மக்கள் வாக்கெடுப்பும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...