விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

Date:

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது மற்றும் விளையாட்டு சுற்றுலாவை (Sports Tourism) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல்-தலை மற்றும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் துபாயில் உள்ள அல் பைத் மாளிகையில் (Al Bayt Palace) நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் துபாயை தளமாகக் கொண்ட முன்னணி விளையாட்டு அமைப்பான Sri Lions International நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கெலும் சுஜித் பெரேரா உட்பட அதன் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இலங்கையில் சர்வதேச ரக்பி போட்டிகளை ஏற்பாடு செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திறன் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

இலங்கை ரக்பி விளையாட்டின் தொழில்நுட்பத் தரத்தை உயர்த்துவதற்கும், வீரர்களுக்குத் தேவையான சர்வதேச அளவிலான பயிற்சிகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் ஆசிய ரக்பி சம்மேளனம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என அதன் தலைவர் கைஸ் அல்-தலை உறுதியளித்தார்.

இவ்வாறான சர்வதேச உறவுகளின் ஊடாக இலங்கையை ஒரு பிராந்திய விளையாட்டு மையமாக கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் சுனில் குமார கமகே இங்கு வலியுறுத்தினார்.

மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், இலங்கையின் விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு மிகவும் சாதகமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள...

ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்:ஈரான் முன்வைத்த 10 நிபந்தனைகள்

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர்...