இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கான அறிவிப்பு

Date:

விடுமுறை மற்றும் ஏனைய விடயங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள இலங்கை தொழிலாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2026 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 21 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்-பிரவேச விசாக்கள் (Re-entry Visa) தானாகவே ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசா நீடிப்பு தொடர்பான விபரங்கள் இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபையின் முறைமையில் (System) புதுப்பிக்கப்படும் என்பதுடன், அந்த காலப்பகுதிக்குள் எல்லைகள் ஊடாக மீண்டும் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் நாளை (19) முதல்...

எரிபொருள் QR பதிவுகளில் சிக்கல்களை தீர்க்க WhatsApp உதவி!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்வதில் சிக்கல்களை...

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது : ஜனாதிபதி உறுதி: மேலதிக தேவைகளுக்காக ஏற்கெனவே ஒப்பந்தம்

மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு ஏற்கனவே...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில...