தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

Date:

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மத்ரஸாவின் 25 ஆண்டுகளின் பாரம்பரியம் மற்றும் சிறப்புமிக்க சேவையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து தனது வெள்ளி விழா நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த 12ம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகவும், சிறப்பு பேச்சாளராகவும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித், அஷ்-ஷெய்க் கலாநிதி மஹ்தூம் (மதனி), மர்கஸ் அல் இக்ரா குர்ஆனிய இஜாஸா கற்கை நெறியின் அதிபர் அஷ்-ஷெய்க் அல் காரி அல் முஜாஇஸ் பவாஸ் பின் பழாள் ஆகியோரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், உலமாக்கள், புத்திஜீவிகள் குர்ராக்கள், மஸ்ஜித் நிர்வாகத் தலைவர்கள் இன்னும் பல விருந்தினர்கள் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மத்ரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மத்ரஸா பாடத்திட்ட அறிமுகம், மத்ரஸாவிற்கான பிரத்தியேக வலைத்தள அறிமுகம், பரிசளிப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு என பல முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...