இன்று இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி

Date:

வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இன்று இரவு அவர் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உள்ளிட்ட 200 பேரைக் கொண்ட தூதுக்குழு இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளது. வியட்நாம் ஜனாதிபதி டோ லம் நாளைய தினம் இலங்கை பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

இதேவேளை வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது கொழும்பு நகரில் இன்றும் நாளையும் விசேட வாகன போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...