முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
மிரிஹான பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் அவர் மேற்கொண்ட முதலீடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே, ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.