வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

Date:

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் பின்வரும் பொருட்களை விற்பனை செய்வது, காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவது அரசாங்கத்தினால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள். ரெஜிபோர்ம், உணவுப் பெட்டிகள் மற்றும் லஞ்ச் சீட்.

பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் அனைத்து வகையான பொலிஎத்திலீன் அல்லது பொலிபுரோப்பிலீன் அலங்காரப் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மதம் அல்லது கலாசார நிகழ்வுகளின் போது இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...