இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

Date:

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது வேறு வரப்பிரசாதங்களை கோரினால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய அமைச்சின் 0702724637 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 1954 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக கௌரவத்திற்குரிய சேவையொன்றை வழங்கும் வகையில் குற்றவியல் வழக்கு சட்ட ஏற்பாடுகளின் 108வது சரத்தின் கீழ் திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அவர்கள் குறித்த சேவையை நாளின் எந்தவொரு நேரத்திலும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர்களின் சேவைக்காக பணம் அல்லது வேறு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பது சட்டவிரோதமான ஒன்றாகும்.

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...