எரிபொருள் QR முறைமையை இறுக்கமாக்க அரசாங்கம் தீர்மானம்!

Date:

நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் QR குறியீட்டு முறைமை மிகவும் கடுமையான முறையில் அமல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க இன்று (01) அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

QR முறைமை மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமைகள் ஏற்கனவே எரிபொருள் பயன்பாட்டை ஓரளவுக்குக் குறைத்துள்ள போதிலும், நாட்டின் தற்போதைய தேவை மற்றும் இறக்குமதித் திறனை விட நுகர்வு இன்னும் அதிகமாகவே உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“உலகளாவிய எரிபொருள் நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருவதால், எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டிய பெரும் தேவை எங்களுக்கு உள்ளது. QR மற்றும் ஒதுக்கீட்டு முறைமை மூலம் கணிசமான அளவு நுகர்வைக் குறைக்க முடிந்த போதிலும், அது இன்னும் நாட்டுக்குத் தேவையான அளவை எட்டவில்லை.”

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இலங்கை கணிசமான அளவு வெளிநாட்டுச் செலாவணியைச் செலவிட நேரிட்டுள்ளதாக அமைச்சர் விபரித்தார்.

இதற்கமைய ஜனவரி மாதத்தில், 186 மில்லியன் அமெரிக்க டொலர்கள், பிப்ரவரி மாதத்தில் 97 மில்லியன் அமெரிக்க டொலர்கள், மே மாதத்தில் மட்டும், 524 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இதே வேகத்தில் எரிபொருளை நுகர்வது நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்ததல்ல என எச்சரித்த அமைச்சர், டொலர் வெளியேற்றத்தைக் குறைத்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதுகாக்க நுகர்வைக் கட்டுப்படுத்துவது அவசியமானது என்று வலியுறுத்தினார்.

இதற்காக, இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியன இணைந்து QR முறைமையை மிகவும் துல்லியமாகவும் இறுக்கமாகவும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.

“இந்த நெருக்கடி காலத்தில் QR பொறிமுறையை கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலம், எரிபொருள் நுகர்வைக் குறைத்து, தேசிய பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தைத் தணிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...

சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை; நீதிமன்றம் உத்தரவு!

‘சிரிலிய சவிய’ நிதியுடன் தொடர்புடைய கணக்கில் நிதியைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப்...

சவூதிக்கான பயணத்தை 24 வரை நிறுத்திய ஸ்ரீலங்கன்

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தமாம் விமான நிலையங்களுக்கான சேவைகளை எதிர்வரும்...

ஞானசார தேரர் பொதுமன்னிப்பு: ஜனாதிபதி தகுந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்பார் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கைகள்...