புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு: பசுமைச் சூழலை உருவாக்கச் சிறப்பு நடவடிக்கை!

Date:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில், புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (23) சிறப்பாக நடைபெற்றது.

தொடர்பாடலும் ஊடக கற்கை நெறி (Communication and Media Studies) பாட வளவாளரான திரு. தேவநேசன் அவர்கள் கல்லூரிக்கான மரக்கன்றுகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

கல்லூரி வளாகத்தை மேலும் பசுமையாக்கும் பரந்த முயற்சியின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவிகளிடையே சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்புணர்வை வளர்ப்பதோடு, மரநடுகையின் அவசியம் மற்றும் இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நடைமுறை ரீதியாக உணர்த்துவதற்கு இச்செயற்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் இப் பசுமை முயற்சிக்குத் தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...