அல் அஸ்லாஃப் முன்னோர் நினைவு மன்றத்தின் 5வது சொற்பொழிவுத் தொடர் நிகழ்வு எதிர்வரும் ஜூலை 27 அன்று கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.
முன்னோடிகளின் வாழ்வையும் அவர்களின் அளப்பரிய பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் அந்தவகையில் கஃபூரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் (ACJU) முன்னாள் தலைவரும், பொதுச் செயலாளருமான மறைந்த அஷ்ஷைக் M.M.A. முபாரக் அவர்களின் நினைவாக அஷ்ஷைக் S.L. நௌபர் (கபூரி, மதானி) அவர்கள் நினைவுச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.
இலங்கைக் கல்விச் சேவையின் முன்னாள் தலைமைக்கல்வி அதிகாரியும், இல்மா சர்வதேச பெண்களுக்கான பாடசாலையின் (Ilma International Girls’ School) நிறுவனருமான ரஷீதா மொஹிதீன் அவர்களின் நினைவாக, சட்டத்தரணியும், முன்னாள் சவூதி அரேபியாவுக்கான தூதுவரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான அஹமத் ஜாவித் யூசுஃப் சொற்பொழிவு ஆற்றுவார்.
மேலும் முன்னாள் நிதியமைச்சரும், புத்தளம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான M.H.M. நைனா மரிக்கார் அவர்களின் நினைவாக, ஹஸ்ஸான் இப்னு சாபித் அகாடமியின் பணிப்பாளர் அல்-உஸ்தாத் அஷ்ஷைக் H. அப்துல் நாஸர் உரையாற்றுவார்.
பிரதம விருந்தினர்களாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஃபரீனா ருஸைக் (Prof. Fareena Ruzaik).
கௌரவ விருந்தினர்களாக முஆத் முபாரக் (அமானா வங்கி PLC), F. சாரா ஹுசைன் (அதிபர் – இல்மா சர்வதேச பெண்கள் பாடசாலை) அப்துல் ஹசீப் நைனா மரிக்கார் பங்கேற்பர்.
சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட இந்தச் சான்றோர்களின் நினைவுகளைக் போற்றும் இந்நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
