கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின் பிள்ளைகள் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
இக்கிராமத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு சான்றாக விளங்கும் அந்தச் சாதனையாளர்கள், சாதிக் ஹைருன்னிஸா ஆசிரியையின் மகள் சம்ஹா (மருத்துவப் பட்டம்), பாஹிமா அன்ஸார் ஆசிரியையின் மகன் ஆசிக் (மருத்துவப் பட்டம்), மெளலவி நிலவ்பர் அவர்களின் மகள் அஸ்மா (மருத்துவப் பட்டம்)
தங்கள் கடின உழைப்பாலும் பெற்றோரின் வழிகாட்டலாலும் மருத்துவ மணிமகுடம் சூடி, இக்கிராமத்திற்கு பெருமை தேடித்தந்துள்ள மூன்று இளம் மருத்துவர்களுக்கும் நெஞ்சார்ந்த உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்!
இவர்களின் இந்தச் சாதனை கிராமத்தின் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

